இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்

புதுசேரியில் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-09-05 16:53 GMT

புதுச்சேரி, செப்.6-

புதுவை சண்முகாபுரத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பிரான்சிஸ் (வயது 26). இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று பிரான்சிஸ் மது குடித்துவிட்டு சின்னத்தம்பி வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த சின்னத்தம்பி மகள் ரோஷ்மியை (25) தரக்குறைவாக திட்டி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் அளித்த புகாரின்பேரில் பிரான்சிஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்