திருநள்ளாறு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநள்ளாறு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

Update: 2023-10-21 16:58 GMT

திருநள்ளாறு

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள் இணைந்து ஆன்லைன் மோசடி, மொபைல் போன் மூலமாக தவறான தகவல்கள் பரப்புவது மற்றும் புகைப்படத்தில் உள்ள பெண்களின் முகத்தை தவறாக சித்தரித்து பணம் பறிக்க முயல்வது, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது உள்ளிட்ட சைபர் கிரைம் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கி வருகின்றன.

அதன்படி, திருநள்ளாறு வடக்கு போலீஸ் சூப்பிரண்டு நித்தின் ரமேஷ் கவ்கால் உத்தரவின் பேரில் திருநள்ளாறு இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வன் தலைமையில் போலீசார் திருநள்ளாறு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சைபர் கிரைம் குறித்து மாணவிகளுக்கு பாடம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் மாணவிகளிடம் பேசுகையில், செல்போன்களை அதிக அளவு பயன்படுத்தக் கூடாது என்றும், சமூக வலைத்தளங்களை தவிர்க்க வேண்டும் என்றும், பாடபுத்தங்களை படித்தும், நூலகங்கள் சென்றும் தங்கள் அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், தங்களுக்கு ஏதும் பிரச்சினை என்றால் பெற்றவர்களிடம் கூறிவிட்டு காவல் நிலையத்தை அணுகவும் என்றும், தங்களது தகவல் ரகசியம் காக்கப்படும் என்றார். இதே போல் திருநள்ளாறு பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளும் சென்றும் பாடம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்