விடுபட்ட 437 விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை

காரைக்காலில் விடுபட்ட 437 விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்க விவசாயிகள் நலசங்கத்தினர் அமைச்சர் நமச்சிவாயத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-09-03 16:52 GMT

காரைக்கால்

புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று காரைக்கால் வந்தார். அவரை, காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் நல சங்க நிறுவனர் கேசவன், தலைவர் ராஜேந்திரன், துணை தலைவர் ஷேக் முகமது. இணை செயலாளர் சோமு, செயற்குழுஉறுப்பினர்கள் ஆறுமுகம், ஆரோக்கியதாஸ் உள்ளிட்ட பலர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்று வழங்கினர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2020-2021-ம் ஆண்டு பயிர் காப்பீடு இழப்பீட்டு, தொகை 437 விவசாயிகளுக்கு கொடுக்கப்படாமல் விடுபட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தும், அரசு வழக்கறிஞரால் விவசாயிகள் அனைவருக்கும் உரிய பயிர் காப்பீடு இழப்பீட்டுதொகை கொடுக்கப்பட்டு விட்டது எனக் கூறியதால் அந்த வழக்கு தள்ளுபடி ஆகிவிட்டது. எனவே உண்மையாக விடுபட்டுள்ள 437 விவசாயிகளுக்கும் உரிய பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை பெற்று தர அமைச்சர் முயற்சிக்க வேண்டும். புதுச்சேரி முதல்வரால், 2 முறை சட்டசபையில் அறிவித்தும், கூட்டுறவு சங்க கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை. எனவே, அமைச்சர் இவ்விசயத்தில் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்