பருத்திக்கு காப்பீட்டு தொகை வழங்கவேண்டும்

மழையால் பாதிக்கப்பட்ட பருத்திக்கு காப்பீட்டு தொகை வழங்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-08-04 17:27 GMT

காரைக்கால்

மழையால் பாதிக்கப்பட்ட பருத்திக்கு காப்பீட்டு தொகை வழங்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மழையால் பாதிப்பு

காரைக்காலில் அண்மையில் விட்டுவிட்டு பெய்த கோடை மழையால், சாகுபடி செய்த பருத்தியில் பூச்சிகளால் பெரிய பாதிப்பு ஏற்பட்டு மகசூல் குறைந்துள்ளது. மேலும், பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால், இந்த ஆண்டு பருத்திக்கு உரிய பயிர் காப்பீடு பெற்று தரவேண்டும்.

2020-2021 ஆண்டுக்கு உரிய காப்பீட்டில் விடுப்பட்டு போன 447 விவசாயிகளுக்கு காப்பீடு தொகையை பெற்றுத்தர வேண்டுகிறோம். விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட, தொடக்க வேளாண்மை சங்க கடனுக்கு உரிய தொகையை சங்கக்களுக்கு வரவு வைத்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு விவசாய கடன் கொடுத்தால் மட்டுமே வரும் பருவத்தில் பயிர் செய்ய முடியும். எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து விவசாய கடன் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்