கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு
புதுச்சேரியில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. புதிதாக 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி
புதுச்சேரியில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. புதிதாக 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்று அதிகரிப்பு
புதுவையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்தது. ஒரு சில நாட்களில் தொற்று பாதிப்பு இல்லாமலும் இருந்தது.
இந்த நிலையில் மீண்டும் தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இன்றைய பாதிப்பு 2 இலக்கை எட்டியது. அதாவது இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 1,184 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், புதிதாக 11 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இன்று 2 பேர் குணமடைந்தனர். தற்போது 25 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
தடுப்பூசி
நேற்று முதல் தவணை தடுப்பூசியை 89 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 583 பேரும், 3-வது தவணை தடுப்பூசியை 200 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 17 லட்சத்து 9 ஆயிரத்து 518 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.