கொரோனா தினசரி பாதிப்பு 100-ஐ நெருங்குகிறது
புதுவையில் கொரோனா தினசரி பாதிப்பு 100-ஐ நெருங்குகிறது.
புதுச்சேரி
புதுவையில் கொரோனா தினசரி பாதிப்பு 100-ஐ நெருங்குகிறது.
93 பேருக்கு பாதிப்பு
புதுவையில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ தொடும் சூழ்நிலையில் தற்போது உள்ளது. இன்று ஒரே நாளில் 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதாவது இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 941 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 93 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
பொதுமக்கள் பீதி
அவர்களில் 58 பேர் புதுச்சேரியையும், 32 பேர் காரைக்காலையும், 2 பேர் ஏனாமையும், ஒருவர் மாகியையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று 41 பேர் குணமடைந்தனர். தற்போது 11 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 314 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். புதுவையில் தொற்று பரவல் 9.88 சதவீதமாகவும், குணமடைவது 98.70 சதவீதமாகவும் உள்ளது. கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு கடுமையாக உயர்ந்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.