ஒப்பந்த செவிலியர்கள் திரண்டதால் பரபரப்பு

சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் திரண்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்த முயன்றத்தால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2023-09-13 21:46 IST

புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று காலத்தில் சுகாதாரத்துறை மூலமாக ஒப்பந்த அடிப்படையில் 400-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், ஏ.என்.எம். ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர். இந்தநிலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர்கள் தங்களுக்கு பணி பாதுகாப்பு அளிக்க வேண்டும், வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக புதுவை சட்டசபை அருகே உள்ள சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த இன்று மாலை 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் திரண்டனர். இதுபற்றி அறிந்த சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர், ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக கோப்புகள் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் பாரதி பூங்காவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்