கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
வில்லியனூர் அருகே அடுத்தடுத்து 6 குழந்தைகள் இறந்ததால் கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
வில்லியனூர்
அடுத்தடுத்து 6 குழந்தைகள் இறந்ததால் கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கட்டிட தொழிலாளி
வில்லியனூா் அருகே கணுவாய்ப்பேட்டை புதுநகரை சேர்ந்தவர் சுந்தரம். கட்டிட தொழிலாளி. அவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு 6 குழந்தைகள் பிறந்தன. ஆனால் உடல்நலக்குறைவால் அடுத்தடுத்து 6 குழந்தைகளும் இறந்தன.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுந்தரம், சரிவர வேலைக்கு செல்லாமல் மதுபோதைக்கு அடிமையானார். மது குடித்து விட்டு வந்து தினமும் வீட்டில் தகராறு செய்து வந்தார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் குடும்பத்தை நடத்த வழியில்லாமல் மஞ்சுளா, வில்லியனூரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வேலைக்கு சென்றார். நேற்று முன்தினம் வழக்கம்போல் அவர் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் தனிமையில் இருந்த சுந்தரம் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வில்லியனூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.