கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

அரியாங்குப்பம் பகுதியில் மனைவியுடன் தகராறு காரணமாக கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-09 17:01 GMT

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் வானவில் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). கட்டிட தொழிலாளி. இவர், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் ஆயக்குடி பகுதியை சேர்ந்த ஏற்கனவே திருமணமான புஷ்பா (35) என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 7 வயதில் மகள் உள்ளார். இந்தநிலையில் மணிகண்டன் குடித்துவிட்டு வந்து புஷ்பாவிடம் தகராறு செய்துள்ளார். அவருடன் கோபித்துக்கொண்டு புஷ்பா வீட்டைவிட்டு வெளியேறினார். இதனால் வேதனை அடைந்த மணிகண்டன், வீட்டின் கூரையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுபற்றி அறிந்த புஷ்பா வீட்டுக்கு வந்து கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்