குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி
வில்லியனூர் அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
புதுச்சேரி
வில்லியனூர் பத்மினி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக, பொதுப்பணித்துறை பொது சுகாதாரக் கோட்டம் மூலம் ரூ.11 லட்சம் மதிப்பில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகளுக்குக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் தொகுதியின் எம்.எல்.ஏ.வும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா எம்.எல்.ஏ.கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இந்த சுத்திகரிப்பு நிலையம் செயல்பாட்டிற்கு வரும்போது, ஒரு நாளைக்கு 20 லிட்டர் கேன் மூலம் 400 கேன்களில் 8 ஆயிரம் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்பட்டு ஒரு கேன் ரூ.7 என்ற அளவில் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும். இதில் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் பழனியப்பன், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.