இணைப்பு சாலை அமைக்கும் பணி
வில்லியனூர் தொகுதியில் இணைப்பு சாலை அமைக்கும் பணியை எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆய்வு செய்தார்.
புதுச்சேரி
வில்லியனூர் தொகுதி தட்டாஞ்சாவடி அருகே உள்ள ரங்கசாமி நகர் வழியாக ஒதியம்பட்டு மெயின்ரோடு செல்லும் இணைப்பு சாலை வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் சுமார் ரூ.88 லட்சம் செலவில் நடந்து வருகிறது. இந்த சாலை அமைக்கும் பணியை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமான சிவா ஆய்வு செய்தார். அப்போது மழையினால் சாலை சேதமாகாத வகையில் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து இளநிலை பொறியாளர் சத்தியநாராயணன், தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், ஆதிதிராவிடர் அணி கலியமூர்த்தி, தொகுதி துணை செயலாளர் அங்காளன், இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.