அகலங்கண்ணு தடுப்பணையில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி

காரைக்காலில் அகலங்கண்ணு தடுப்பணையில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2023-07-08 16:24 GMT

காரைக்கால்

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தொகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அகலங்கண்ணு என்னும் பிரதான தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணை கட்டி பல ஆண்டுகள் ஆவதால் தடுப்பணையின் தரையில் அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் தளம் மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. இதனால் அணையின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. இதை கருத்தில் கொண்டு நபார்டு வங்கி நிதியுதவியுடன் தடுப்பணையின் கான்கிரீட் தளம், தடுப்புச்சுவர் அமைக்கும் பணி மற்றும் அகலங்கண்ணு கிராமத்தில் இருந்து செட்டிக்கோட்டம் சிற்றேரி வரையிலான இணைப்பு சாலையை மேம்படுத்தும் பணி ரூ.4.32 கோடியில் நடந்து வருகிறது. இந்த பணிகளை காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் இன்று ஆய்வு செய்தார். அப்போது இந்த மாதத்திற்குள் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்