ரூ.12 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி
மணவெளி தொகுதியில் ரூ.12 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிகளை சபாநாயகர் செல்வம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.;
அரியாங்குப்பம்
மணவெளி தொகுதி நாணமேடு பேட் பகுதியில் ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழகம் மூலம் ரூ.12 லட்சம் செலவில் புதிய சிமெண்டு சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை சபாநாயகர் செல்வம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழக செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் பூங்காவனம், இளநிலைப் பொறியாளர் முகுந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சபாநாயகரிடம், இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.