சமூக அமைப்பினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
புதுச்சேரி பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில் தமிழீழம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 13-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுச்சேரி
புதுச்சேரி பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில் தமிழீழம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 13-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி புதுவை சுதேசி மில் அருகில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பெரியார் சிந்தனையாளர் இயக்க அமைப்பாளர் தீனா தலைமை தாங்கினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் பாவாணன், விடுதலை வேங்கை நிறுவனர் மங்கயர்செல்வன், தமிழர் களம் தலைவர் அழகர் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் இனப்படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.