இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல்

அடிப்படை வசதிகள் கேட்டு இ்ந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

Update: 2022-05-25 16:07 GMT

பாகூர்

ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட குடியிருப்புபாளையம், ஆதிங்கப்பட்டு, பின்னாட்சிக்குப்பம் சாலை மோசமாக உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும், கழிவுநீர் வாய்க்காலை புதுப்பிக்க வேண்டும், பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் உள்பட அடிப்படை வசதிகள் கேட்டு இ்ந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் குடியிருப்புபாளையம் பஸ் நிறுத்தம் அருகே இன்று காலை சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு தொகுதி செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வீரப்பன், நாராயணசாமி, பக்தவச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசியக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாசிலாமணி, பாகூர் தொகுதி செயலாளர் கலியமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

இந்த மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்துபோக செய்தனர். இந்த போராட்டம் காரணமாக பாகூர் - சேலியமேடு சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்