மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காரைக்காலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
காரைக்கால்
டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நியூஸ்கிளிக் என்ற செய்தி இணையதளம் சீன ஆதரவு பிரசாரத்துக்காக அந்த நாட்டில் இருந்து பணம் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பயங்கரவாத எதிர்ப்பு 'உபா' சட்டத்தின் கீழ் அந்த நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் வீடு, பத்திரிகையாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதை கண்டித்து காரைக்கால் பஸ் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் தமீம் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் வின்சென்ட் மற்றும் பலர் கலந்துகொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.