தேர்வு மையங்களில் கலெக்டர் ஆய்வு

காரைக்கால் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் இன்று ஆய்வு செய்தார்.;

Update:2023-07-21 21:29 IST

காரைக்கால்

புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையில் 116 மேல் நிலை எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு, நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 46 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். இதற்காக புதுச்சேரியில் 107, காரைக்காலில் 13, மாகியில் 5, ஏனாம் பகுதியில் 8 என மொத்தம் 133 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் காரைக்கால் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 13 தேர்வு மையங்களை, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். ஆய்வின் போது தேர்வு எழுத வருபவர்களுக்கு குடிநீர், மின் விளக்கு, மின்விசிறி, கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தார்.

பின்னர் கலெக்டர் குலோத்துங்கன் நிருபர்களிடம் கூறுகையில் 'விண் ணப்பத்தாரர்கள் தங்களது நுழைவு சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். நுழைவுசீட்டில் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை உரிய இடத்தில் ஒட்டி கையொப்பமிட்டு எடுத்து வரவேண்டும். விண்ணப்பதாரர்கள் நுழைவு சீட்டுடன் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் இவற்றில் ஏதேனும் ஒன்றின் அசலை கட்டாயம் கொண்டு வரவேண்டும். தேர்வு மையத்தின் நுழைவு வாயில் சரியாக காலை 10 மணிக்கு மூடப்படும். அதற்கு பின்னர் தேர்வு மையத்தில் நுழைவதற்கு அனுமதி கிடையாது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்