புதுச்சேரி கவர்னர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விழா - தமிழிசை சவுந்தரராஜன், முதல்-மந்திரி ரங்கசாமி கேக் வெட்டி கொண்டாட்டம்
புதுச்சேரி கவர்னர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விழாவை கேக் வெட்டி கொண்டாடினர்.;
புதுச்சேரி,
உலகம் முழுவதும் நாளைய தினம் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று புதுச்சேரி கவர்னர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விழா களைகட்டியது. இதில் புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி, துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் வகையில் பிரம்மாண்ட கேக் தயார் செய்யப்பட்டிருந்தது. பின்னர் முதல்-மந்திரி ரங்கசாமி மற்றும் துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் இணைந்து கேக் வெட்டி அதனை அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கினர்.