துணை சபாநாயகர் ராஜவேலுவிடம் நலம் விசாரித்த முதல்-அமைச்சர் ரங்கசாமி

புதுவை துணை சபாநாயகருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரில் சென்று நலம் விசாரித்தார்.

Update: 2023-09-22 17:08 GMT

புதுச்சேரி

புதுவை துணை சபாநாயகர் ராஜவேலு இதயநோயினால் அவதிப்பட்டு வந்தார். அவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் சென்னையில் உள்ள அவரது மகள் வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார்.

அவரை முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். அப்போது விரைவில் குணமடைந்து மக்கள் பணிசெய்ய வேண்டும் என்று வாழ்த்தினார். மேலும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், நாக.தியாகராஜன் மற்றும் புதுவை முக்கிய பிரமுகர்கள் பலரும் துணை சபாநாயகர் ராஜவேலுவை சந்தித்து உடல்நலம் விசாரித்து வருகின்றனர். விரைவில் அவர் புதுவை திரும்ப திட்டமிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்