திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்
ஆடிப்பூர பிரம்மோற்சவ விழாவையொட்டி, திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கும் காமாட்சி அம்மனுக்கு ஆடிப்பூர தேரோட்டம் இன்று நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வில்லியனூர்
ஆடிப்பூர பிரம்மோற்சவ விழாவையொட்டி, திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கும் காமாட்சி அம்மனுக்கு ஆடிப்பூர தேரோட்டம் இன்று நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேரோட்டம்
வில்லியனூர் அருகே திருக்காஞ்சியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் உள்ள காமாட்சி அம்மனுக்கு ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது. இதற்காக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு திருத்தேரில் எழுந்தருளினார்.
அமைச்சர் வடம் பிடித்தார்
இதனை தொடர்ந்து தேரோட்டத்தை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். 4 மாட வீதிகளின் வழியாக தேர் சென்று மீண்டும் நிலைக்கு வந்தது.
விழாவில் இன்று (சனிக்கிழமை) ஆடிப்பூர வளையல் உற்சவம் நடைபெறுகிறது. இதற்காக 1 லட்சம் வளையல்களை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாண நிகழ்ச்சியும், திங்கட்கிழமை விடையாற்றி உற்சவமும் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி சீதாராமன், நிர்வாக அதிகாரி சதீஷ் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.