புதுவை- கடலூர் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்

நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழாவையொட்டி புதுவை- கடலூர் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-07-20 18:01 GMT

புதுச்சேரி

புதுவை போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை நயினார்மண்டபத்தில் உள்ள நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் உற்சவம் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதனை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் காரணத்தால் பொதுமக்கள் நலன் கருதி நாளை மறுநாள் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை புதுவை- கடலூர் சாலையில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.

அதாவது கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி வரும் பஸ்கள் கனரக வாகனங்கள் அனைத்தும் தவளக்குப்பம் சந்திப்பில் இருந்து இடது பக்கம் திரும்பி அபிஷேகபாக்கம் வழியாக வில்லியனூர் சென்று பின்பு இந்திராகாந்தி சிலை வழியாக புதுச்சேரியை அடைய வேண்டும்.

புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து கடலூர் செல்லும் வாகனங்கள் இந்திராகாந்தி சிலை வழியாக வில்லியனூர் சென்று கரிக்கலாம்பாக்கம் - அபிஷேகபாக்கம் வழியாக கடலூர் சாலையை அடைய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுளளது.

Tags:    

மேலும் செய்திகள்