பல்கலைக்கழக பேராசிரியர் மீது சி.பி.ஐ. வழக்கு

புதுவையில் பல்கலைக்கழக பேராசிரியர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

Update: 2023-08-12 16:35 GMT

புதுச்சேரி

புதுவை பல்கலைக்கழக மனித மேம்பாட்டு மையத்தின் பொறுப்பு இயக்குனராக இருந்த பேராசிரியர் ஹரிகரன் நிதிமுறைகேடு செய்ததாகவும் அதனை மறைக்க துணைவேந்தர் குர்மீத் சிங் கையூட்டு பெற்றதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதன் பேரில் நிதி முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் பேராசிரியர் ஹரிகரன் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

மேலும் இந்த வழக்கில் துணைவேந்தர் குர்மீத்சிங் பெயரை சேர்ப்பது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்