தச்சுத்தொழிலாளி பலி

புதுவை மேட்டுப்பாளையம் அருகே நடந்த மோட்டார்சைக்கிள் விபத்தில் தச்சுத்தொழிலாளி பலியானார்.

Update: 2023-10-02 13:30 GMT

மூலக்குளம்

விழுப்புரம் மாவட்டம் வானூரை சேர்ந்தவர் விஜய் (வயது 25). தச்சுத்தொழிலாளி. இவர் சொந்த வேலை காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் நேற்று புதுவை வந்தார். மேட்டுப்பாளையம் கனரக வாகன முனையம் அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் விஜயின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த ஆலங்குப்பத்தை சே்ாந்த பாரதிராஜா (28) படுகாயம் அடைந்தனர். அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து புதுச்சேரி வடக்குப்பகுதி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்