புதுவைக்கு மீண்டும் வந்த சரக்கு கப்பல்

புதுவை துறைமுகத்துக்கு இன்று மீண்டும் 15 கன்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு சரக்கு கப்பல் வந்தது.

Update: 2023-06-30 17:33 GMT

புதுச்சேரி

புதுவை துறைமுகத்துக்கு இன்று மீண்டும் சரக்கு கப்பல் வந்தது.

சரக்கு கப்பல்

புதுவை துறைமுகத்திலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கியது. கடந்த முறை சரக்கு கப்பல் ஒன்று புதுவை துறைமுகத்துக்கு வந்தபோது தரைதட்டி திடீர் பழுது ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த சரக்கு கப்பல் சென்னை துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பழுது பார்க்கப்பட்டு தற்போது மீண்டும் சரக்கு போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் புதுவை துறைமுகம் முகத்துவாரம் தூர்வாரும் பணியும் தற்போது நடந்து வருகிறது.

15 கன்டெய்னர்கள்

இந்தநிலையில் கடலூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு தேவையான வேதிப்பொருட்களை 15 கன்டெய்னர்களில் ஏற்றிக்கொண்டு சரக்கு கப்பல் சென்னையிலிருந்து இன்று புதுச்சேரி வந்தது. ஒன்றிரண்டு நாட்கள் புதுவை துறைமுகத்தில் இந்த பொருட்களை இறக்கிவிட்டு கப்பல் சென்னை செல்லும்.

புதுவை துறைமுகத்தில் இருந்து வாரம் இருமுறை கப்பல் மூலம் சரக்கு போக்குவரத்தை நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் போதிய சரக்கு போக்குவரத்து நடைபெறவில்லை. தேவைக்கேற்ப இந்த சரக்கு போக்குவரத்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்