விமான சேவைகள் ரத்து
மாண்டஸ் புயல் காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.;
புதுச்சேரி
புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் இடையே நாள்தோறும் விமானங்கள் இயங்கப்பட்டு வருகின்றன. மாண்டஸ் புயல் காரணமாக புதுவையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) புதுவை-பெங்களூரு, ஐதராபாத் இடையே விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.