ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

புதுச்சேரியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2022-08-14 17:19 GMT

புதுச்சேரி

புதுச்சேரியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

அமுத பெருவிழா

புதுச்சேரியில் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்ட வருகிறது. விழாவில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க மாநில எல்லைக்களான கோரிமேடு, காலாப்பட்டு, மதடிக்கப்பட்டு உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே புதுச்சேரிக்குள் வர அனுமதித்தனர். அதேபோல் தங்கும் விடுதிகளில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யாரும் தங்கி உள்ளார்களா? எனவும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

புதுச்சேரி ரெயில் நிலையத்தில் கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சிதர ரெட்டி மேற்பார்வையில் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.

புதுச்சேரியில் இருந்து புறப்பட்ட தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில், விழுப்புரத்தில் இருந்து புதுவைக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் உடைமைகளை சோதனை செய்தனர். முன்னதாக சுதந்திர தினவிழா நடைபெறும் கடற்கரை சாலையிலும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் சோதனை நடத்தினர்.

இதேபோல் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் காணப்பட்ட பகுதிகளான பஸ்நிலையம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் சாதாரண உடைகளிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்