அரசு ஆஸ்பத்திரியில் ரத்ததான முகாம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.;

Update:2023-08-14 21:28 IST

காரைக்கால்

சுதந்திர தினத்தை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் த.மு.மு.க. சார்பில் காரைக்கால் மெய்தின் பள்ளி வீதியில் உள்ள சமுதாய கூடத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார்.

காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கண்ணகி தொடங்கி வைத்தார். திருநள்ளாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வம், காரைக்கால் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் முகமது சிக்கந்தர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முகாமில் 100-க்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்