ரத்ததானம் முகாம்
புதுச்சேரி புனித பேட்ரிக் பள்ளி மற்றும் ஜிப்மர் மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாம் நடத்தியது.;
புதுச்சேரி, மார்ச்.7-
புதுச்சேரி புனித பேட்ரிக் பள்ளியின் முன்னாள் தாளாளரும், நிறுவனருமான ரெஜிஸ்சின் 4-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு புனித பேட்ரிக் பள்ளி, ஜிப்மர் மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாமை நடத்தியது. பள்ளியின் தாளாளர் பிரடெரிக் தலைமை தாங்கி முகாமை தொடங்கிவைத்தார்.
பள்ளியின் மருத்துவ இயக்குனர் ஜீத்தா பிரடெரிக், பள்ளி முதல்வர் அல்போன்ஸ் ஹில்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜிப்மர் ரத்த வங்கி டாக்டர்கள் வடிவேல், ஹரிப்பிரியா ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் ரத்ததானம் பெற்றனர். முகாமில் பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர், பொதுமக்கள் பலரும் ரத்த தானம் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம், சமுதாய நலப்பணித்திட்டம் மற்றும் சாரணிய தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.