கா்நாடக அரசை கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
காவிாி நீா் தரமறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால்
காரைக்கால் மாவட்டத்திற்கான காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்து இன்று காலை புதிய பஸ் நிலையம் அருகே பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் காவிரியின் கடை மடை பகுதியான, காரைக்கால் மாவட்டத்திற்கு, ஆண்டுதோறும் வழங்கப்படும் 7 டி.எம்.சி தண்ணீரில், நடப்பாண்டு 0.5 சதவீதம் மட்டுமே வந்துள்ளது. தண்ணீர் தர மறுக்கும் கா்நாடக காங்கிரஸ் அரசை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சியினர் இதுவரை தட்டிக் கேட்கவில்லை.
இனியாவது கேட்கவேண்டும். காரைக்கால் மாவட்டத்திற்கான காவிரி நீரில், உடனே 1 சதவீதம் வழங்க கர்நாடகா அரசு முன்வர வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினா். அப்போது திடீரென்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.