அரசு பல் மருத்துவ கல்லூரியில் பேட்டரி கார் சேவை

அரசு பல் மருத்துவ கல்லூரியில் இலவச பேட்டரி கார் சேவையை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.;

Update:2022-09-06 21:32 IST
அரசு பல் மருத்துவ கல்லூரியில் பேட்டரி கார் சேவை

புதுச்சேரி

புதுவை கோரிமேட்டில் உள்ள மகாத்மாகாந்தி முதுநிலை பல் மருத்துவ நிறுவனத்துக்கு ரூ.5.25 லட்சம் மதிப்பில் 6 நபர்கள் பயணிக்கக்கூடிய பேட்டரி கார் முன்னாள் மாணவர்களால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. பல் மருத்துவக்கல்லூரிக்கு வரும் நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் இந்த பேட்டரி காரில் மருத்துவமனை வளாகத்துக்குள் இலவசமாக பயணம் செய்யலாம்.

இந்த சேவையை முதல்-அமைச்சர் ரங்கசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம் எம்.எல்.ஏ., கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார், இயக்குனர் ஸ்ரீராமுலு, பல் மருத்துவக்கல்லூரி டீன் கென்னடிபாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்