பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் வங்கி ஊழியர் தூக்குப்போட்டு சாவு

பெண் போலீஸ் வீட்டில் வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-09-16 21:13 IST

காரைக்கால்-

பெண் போலீஸ் வீட்டில் வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சித்தி ஏட்டு வீட்டில் வசித்தார்

காரைக்கால் நேருநகர் அன்னை தெரசா நகரைச் சேர்ந்தவர் நெல்சன்-ஜெயமேரி. இவர்களது மகன்கள் ஸ்டாலின் அஜய் (வயது28), அபினேஷ்ராஜ் (26).

இதில், அபினேஷ்ராஜ் டிப்ளமோ லேப் டெக்னீசியன் முடித்துவிட்டு பேட்மிட்டன் பயிற்சியாளராக இருந்து வருகிறார். ஸ்டாலின் அஜய் எம்.எஸ்சி. பட்டதாரி. தனியார் வங்கியில் காசாளராக வேலை செய்து வந்தார். அபினேஷ்ராஜ் பெற்றோர் வீட்டிலும், ஸ்டாலின் அஜய், நேருநகர் பாரதியார் சாலையில் உள்ள சித்தியான போலீஸ் ஏட்டு செல்வி வீட்டிலும் வசித்து வந்தனர்.

தூக்குப்போட்டு சாவு

ஸ்டாலின் அஜய் சித்தி வீட்டில் இருக்கும் போது, வீட்டு அறையை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு இருப்பது வழக்கமாம். நேற்று அவர் வேலைக்கு போகாமல், வீட்டு அறையில் உள் தாழ்ப்பாள் போட்டுகொண்டு இருந்துள்ளார். மாலை வரை ஸ்டாலின் அஜய் வெளியே வராததால், சித்தி செல்வி மற்றும் பெற்றோர் சந்தேகமடைந்து கதவை தட்டியுள்ளார்.

கதவை திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு ஸ்டாலின் அஜய் மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

போலீஸ் விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து, காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்