புதுவை அரசு அலுவலகங்களில் 17 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

அரசு அலுவலகங்களில் 17 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.;

Update:2022-06-06 23:32 IST

புதுச்சேரி

அரசு அலுவலகங்களில் 17 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

சுற்றிக்கை

புதுவை அரசின் சார்பு செயலாளர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் அரசு அலுவலகங்கள், சார்பு நிறுவனங்களுக்கு இன்று இரவு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை வாங்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

17 பொருட்களின் விவரம்

அதன்படி 17 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும் விதித்துள்ளது. அதாவது, பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கொடிகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல் (ஸ்டிரா), தண்ணீர் பாக்கெட்டுகள், சாப்பாட்டு மேஜையில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்கள், உணவுகளை பொட்டலம் போட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பேப்பர்கள், பிளாஸ்டிக் தெர்மாகோல் தட்டுகள் மற்றும் கப்புகள், பிளாஸ்டிக் காது குடைப்பான் குச்சிகள், பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட பலூன்கள், பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட மிட்டாய்கள், ஐஸ்கீரிம், தெர்மாகோல் அலங்காரம், 100 மைக்ரானுக்கு குறைவான தடிமன் கொண்ட பேனர்கள், 60 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கரண்டிகள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்