கடல்அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு

புதுச்சேரியில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி எல்.முருகன் உறுதி அளித்தார்.

Update: 2022-11-05 14:56 GMT

புதுச்சேரி

முத்தியால்பேட்டை தொகுதி சோலை நகர் மீனவர்களுடன் மத்திய மீன்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் கலந்துைரயாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற மீனவர்கள், கடல் அரிப்பை தடுக்க சோலைநகர் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கவேண்டும், படகு நிறுத்துவதற்கு இடவசதி செய்து கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர். இந்த கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த மத்திய மந்திரி, கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் பார்வையிட்டார்.

பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் முத்தியால்பேட்டை செந்தில்குமரன் ஏற்பாட்டில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர் சாய் சரவணன்குமார், அசோக்பாபு எம்.எல்.ஏ, பா.ஜ.க. பொதுசெயலாளர் மோகன்குமார், மீனவர் அணி தலைவர் பழனி, மகளிர் அணி தலைவர் ஜெயலட்சுமி, மாநில துணை தலைவர் ஜெயக்குமார், பட்டியலின தலைவர் தமிழ்மாறன், இளைஞரணி நிர்வாகிகள் உமாசங்கர், ராக்பெடரிக், அஸ்வின், வணிகர் பிரிவு செயலாளர் ராயல் சீனிவாசன் மற்றும் தொகுதி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்