அரசு பள்ளியில் விழிப்புணர்வு பயிற்சி பட்டறை

போதை பழக்கத்தில் இருந்து இளைஞர்களை தடுத்தல் குறித்து நெடுங்காடு அரசு பள்ளியில் விழிப்புணர்வு பயிற்சி பட்டறை நடைபெற்றது.

Update: 2023-10-11 18:10 GMT

நெடுங்காடு

புதுச்சேரி அரசு ஊரக வளர்ச்சித்துறை, ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகம் இணைந்து போதை பழக்கத்திலிருந்து இளைஞர்களை தடுத்தல் மற்றும் பாதுகாத்தலுக்கான விழிப்புணர்வு பயிற்சி பட்டறை நெடுங்காடு ஜவஹர்லால் நேரு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்றது. பயிற்சி பட்டறையை காரைக்கால் மாவட்ட துணை கலெக்டர் ஜான்சன் தொடங்கி வைதார். அப்போது அவர் பேசுகையில்,'மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாக கூடாது. மற்றவர்களுக்கு நீங்கள் ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும். மேலும், புகையிலை பொருட்களை விற்பது தெரிந்தால் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும்' என்றார்.

இதில் நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார், மேல்நிலை கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி, பள்ளியின் துணை முதல்வர் அசோகன், காரைக்கால் மாவட்ட என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் மற்றும் மருத்துவ அதிகாரிகள், புதுச்சேரி அரசு ஊரக வளர்ச்சித்துறை, ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்