பெண்ணை தாக்கி கொலைமிரட்டல்
புதுச்சேரியில் முன்விரோததால் பெண்ணை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
புதுச்சேரி
புதுவை சாரம் சக்தி நகரை சேர்ந்தவர் மகேஷ்வரி (வயது 37). இவர் மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (30) என்பவருக்கும் இடையே விரோதம் இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டதன்பேரில், போலீசார் ரமேசை எச்சரிக்கை செய்துள்ளனர்.
இந்தநிலையில் மீண்டும் ரமேஷ் மகேஷ்வரியுடன் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளார். மேலும் வெடிகுண்டு வீசி கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இது குறித்த புகாரின்பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.