பெயிண்டர் மீது தாக்குதல்

புதுவையில் பெயிண்டரை தாக்கிய நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2023-08-17 21:56 IST

புதுச்சேரி

உருளையன்பேட்டை ராஜா நகரை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 37). பெயிண்டர். இவர் அய்யனார்கோவில் வீதியிலுள்ள பாருக்கு சென்று மது குடித்துள்ளார். அப்போது அவருக்கு ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த ஜீவானந்தம் என்பவர் அறிமுகமாகியுள்ளார். மதுகுடித்துவிட்டு வெளியே வந்த அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த ஜீவானந்தம் பாக்கியராஜை தாக்கி கீழே தள்ளி கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பாக்கியராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்