நகை தொழிலாளி, நண்பர் மீது தாக்குதல்
புதுவையில் நகை தொழிலாளி, நண்பர் மீது தாக்குதல் நடத்தியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.;
புதுச்சேரி
புதுவை உழவர்கரை ஜவகர் நகரை சேர்ந்தவர் அகஸ்டின் (வயது 40). நகை தொழிலாளியான இவர் நெல்லுமண்டி சந்தில் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு இவர் தனது நண்பரான கோட்டகுப்பத்தை சேர்ந்த தமிழரசன் என்பவருடன் குடும்பத்துடன் அண்ணசாலையில் உள்ள தியேட்டருக்கு படம் பார்க்க வந்துள்ளார்.
அப்போது மோட்டார் சைக்கிளை வரிசையில் விடுவது தொடர்பாக அங்கு வந்த 2 பேர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த நபர்கள், அகஸ்டின் மற்றும் தமிழரசனை சரமாரியாக கைகளால் தாக்கி எட்டி உதைத்துள்ளனர். இதுகுறித்து அகஸ்டின் பெரியகடை போலீசில் புகார் செய்தார்.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை தாக்கியது யார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.