கல்லூரி மாணவர் மீது தாக்குதல்

லாஸ்பேட்டையில் கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்திய 4 போரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-19 17:23 GMT

புதுச்சேரி

புதுச்சேரி ஆலங்குப்பம் அண்ணா நகரை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 21). இவர் லாஸ்பேட்டை சமுதாய கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி சார்பாக கல்வி சுற்றுலா சென்ற இடத்தில் அவருக்கும் சஞ்சய், அஜய் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று விக்னேஷ் கல்லூரி வளாகத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்குவந்த சஞ்சய், அஜய் மற்றும் அவரது நண்பர்கள் அய்யனார், மணி ஆகிய 4 பேரும் சேர்ந்து விக்னேசை தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின்பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்