தொழிலாளி மீது தாக்குதல்

வில்லியனூர் அருகே தனியார் பாரில் மது குடிக்க சென்றவர்களுக்கிடையே மோதல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2023-06-02 22:14 IST

வில்லியனூர்

வில்லியனூர் அருகே உள்ள தொண்டமாநத்தம் பேட் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 47). நேற்று முன்தினம் இவர் கூடப்பாக்கம் பகுதியில் தனியார் மது பாரில் குடிக்க சென்றார். அப்போது அவர் பீர் கேட்டுள்ளார். அப்போது கடையில் இருந்த ஊழியர்கள், கூனிச்சம்பட்டு பகுதியை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன், கூடப்பாக்கத்தை சேர்ந்த பிரபல ரவுடி அன்புரோஸ் ஆகியோர் பீர் தான் குடிப்பீயா என்று கூறியதாக தெரிகிறது.

இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து தனசேகரனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்