தொழிலாளி மீது தாக்குதல்

பாகூரில் மதுபோதையில் தொழிலாளி மீது தாக்குதல் நடத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update:2023-05-30 21:18 IST

பாகூர்

பாகூரை அடுத்த குடியிருப்புபாளையத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 58). கூலி தொழிலாளி. இவர் இன்று வேலை முடிந்து பாகூரில் சாராயம் குடித்துவிட்டு பக்கத்தில் உள்ள காலி மனையில் அமர்ந்திருந்தார். அப்போது பாகூரைச் சேர்ந்த ஜெகன் (40), என்பவர் மதுபோதையில் செல்வராஜிடம் தகராறு செய்து தலையில் கல்லால் தாக்கியுள்ளார். காயம் அடைந்த அவர், பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். புகாரின் பேரில் பாகூர் போலீசார் ஜெகன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்