வாலிபர் மீது தாக்குதல்

முன்விரோத காரணமாக வாலிபர் தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2023-01-09 23:37 IST

வில்லியனூர்

வில்லியனூர் அருகே உள்ள கோபாலன் கடை பகுதியை சேர்ந்தவர் அந்தோணி ராஜ் (வயது 35). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டது. அப்போது அந்தோணிராஜ், பிரகாசை தாக்கிவிட்டு சென்னைக்கு சென்றுவிட்டார்.

இந்தநிலையில் புத்தாண்டு கொண்டாட சொந்த ஊருக்கு அந்தோணிராஜ் வந்திருந்தார். இதுகுறித்து அறிந்த பிரகாஷ் தனது நண்பர்கள் சதீஷ், பிரதீஷ் ஆகியோருடன் சேர்ந்து அந்தோணிராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து வில்லியனூர் போலீசில் அந்தோணிராஜ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்