அண்ணன்-தம்பி மீது தாக்குதல்
புதுவையில் அண்ணன்-தம்பியை தாக்கியதின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.;
அரியாங்குப்பம்
தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு புதுக்குப்பம் சுனாமி நகர் பகுதியை சேர்ந்தவர் செங்கேணி என்ற சுந்தர் (வயது 42). மீன்பிடி தொழிலாளி. சம்பவத்தன்று சுந்தரின் தம்பி வீரசிங் வீட்டின் அருகே புடவையை போர்த்தியபடி ஜீவா என்ற சுப்ரமணி பதுங்கி இருந்தார். இதை வீரசிங் தட்டிக்கேட்டார்.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜீவா தனது மைத்துனருடன் சேர்ந்து சுந்தரையும், வீரசிங்கையும் தாக்கி விட்டு தப்பியோடினார். இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.