தாய்-மகன் மீது தாக்குதல்

காரைக்காலில் தாய்-மகன் மீது தாக்குதல் நடத்திய 3பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-09-07 23:51 IST

காரைக்கால்

காரைக்கால் கம்மாளர் வீதியைச் சேர்ந்தவர் ஜெயசீலன். அவரது மனைவி பிலோமின் (வயது 65). இவர் தனது மகன் விக்டர் வில்சனுடன் நேருநகர் டோபிகானா பகுதியில் புதர் மண்டியிருக்கும் தனது இடத்தை சுத்தம் செய்ய சென்றார். அப்போது பிலோமின் மனைக்கு அருகில் நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த வினோத் தங்கள் நிலத்தையும் ஏன் சேர்த்து சுத்தம் செய்கிறீர்கள் என்று கூறி பிலோமினை தாக்கியதாக கூறப்படுகிறது. இதை தடுத்த விக்டர் வில்சனையும், வினோத் மற்றும் அவரது நண்பர்கள் ஜோசப், நிக்கோலாஸ் ஆகியோர் சேர்ந்து தாக்கி கீழே தள்ளிவிட்டனர். இதில் காயமடைந்த 2 பேரும் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்