அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி வேறு இடத்துக்கு மாற்றம்

அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி இன்று முதல் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு இயங்க தொடங்கியது.

Update: 2023-09-20 17:54 GMT

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி இன்று முதல் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு இயங்க தொடங்கியது.

பழமை வாய்ந்த கட்டிடம்

புதுச்சேரி அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் மிகவும் பழமை வாய்ந்த கட்டிடம் ஆகும். எனவே, அதை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் இந்த கட்டிடத்தில் 10-ம் வகுப்பு வரை பயிலுகின்ற சுமார் 250 மாணவ-மாணவிகளை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து ஆலோசனை சமீபத்தில். பாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. இதில் பள்ளி கல்வித்துறை ஆய்வாளர் தனசெல்வம்நேரு மற்றும் தலைமை ஆசிரியை, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

வேறு இடத்துக்கு மாற்றம்

இந்த நிலையில் நோணாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாணவர்களை மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. ஆனால் அதற்கு, பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து அருகிலேயே உள்ள அரசு கட்டத்தில் வகுப்புகளை நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் இன்று முதல் அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி வகுப்பறை அருகில் உள்ள அரசு அலுவலகத்தில் இயங்கத் தொடங்கியதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தற்போதுள்ள பழமையான இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்