சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய போலீஸ் குடியிருப்பு

பராமரிப்பு இன்றி விடப்பட்டதால் சமூக விரோதிகளின் கூடாராக பாழடைந்த போலீஸ் குடியிருப்பு மாறியுள்ளது.

Update: 2023-10-08 16:18 GMT

காரைக்கால்

பராமரிப்பு இன்றி விடப்பட்டதால் சமூக விரோதிகளின் கூடாராக பாழடைந்த போலீஸ் குடியிருப்பு மாறியுள்ளது.

போலீஸ் குடியிருப்பு

காரைக்காலை அடுத்த விழுதியூர் சாலையில் சுமார் 20 வீடுகளுடன் கூடிய போலீஸ் குடியிருப்பு உள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த குடியிருப்பில் காரைக்கால் நகர போலீசார் குடும்பத்துடன் வசித்து வந்தனர். நாளடைவில் இந்த கட்டிடம் முறையாக பராமரிக்கப்படவில்லை.

சுவர்கள், ஜன்னல்கள் சேதமடைந்ததால் தொடர்ந்து அங்கு வசிப்பது பாதுகாப்பற்ற நிலையாக மாறியது. இது குறித்து போலீசார் புகார் தெரிவித்தும், குடியிருப்பு பராமரிக்கப்படவில்லை. இதனால் வேறு வழியின்றி போலீசார் வீட்டை காலி செய்து வேறு இடத்துக்கு மாற்றினர். இவ்வாறு ஒவ்வொரு குடும்பமாக வெளியேற, கடந்த 3 ஆண்டுகளாக யாருமின்றி கிடக்கிறது.

சமூக விரோதிகள்

தற்போது செடி, கொடிகள் வளர்ந்து, பாழடைந்த பங்களாவாக போலீஸ் குடியிருப்பு காட்சியளிக்கிறது. கஞ்சா, மதுபிரியர்களால் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறியுள்ளது. இது அப்பகுதி பெண்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

மிகவும் மோசமான நிலையில் உள்ள இந்த கட்டிடத்தை முழுவதுமாக இடித்துவிட்டு புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டினால் பயனுள்ளதாக இருக்கும் என்று போலீசார் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்