புனித அன்னம்மாள் ஆலய ஆண்டு பெருவிழா

தவளக்குப்பம் அருகே புனித அன்னம்மாள் ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2023-07-24 17:10 GMT

அரியாங்குப்பம்

தவளக்குப்பம் அருகே கொருக்கமேடு கிராமத்தில் புனித அன்னம்மாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 100-வது ஆண்டு பெருவிழா மற்றும் ஆடம்பரதேர் பவனி வருகின்ற 30-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி நேற்று இரவு திருவிழா தொடக்கமாக ஆலயத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ஆலய பங்கு தந்தை அந்தோணிரோச் தலைமையில் திருப்பலி நடந்தது. சிறப்பு அழைப்பாளராக உயர் மறை மாவட்ட முதன்மை குரு குழந்தைசாமி கலந்துகொண்டு கொடியேற்றத்தை நடத்தி வைத்தார்.

நிகழ்ச்சியில் கடலூர் செயின்ட் ஜோசப் ஐ.டி.ஐ. பங்கு தந்தை அருள்புஷ்பம் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். விழாவில் தினமும் சிறப்பு திருப்பலி மற்றும் தேர்பவனி நடக்கிறது. வருகிற 30-ந் தேதி ஆடம்பர தேர்பவனி நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்