அழகு நிலையத்தில் திருட முயற்சி
காரைக்கால் அருகே அழகு நிலையத்தில் திருட முயற்சி செய்ததை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;
காரைக்கால்
கோட்டுச்சேரி ஜீவா நகரை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (வயது 40). இவர் காரைக்கால் சின்னக்கண்ணு தெருவில் அழகுநிலையம் வைத்துள்ளார். நேற்று இரவு அழகு நிலையத்தை மூடிவிட்டு ஆரோக்கியதாஸ் வீட்டுக்கு சென்றார். பின்னர் இன்று காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் எதுவும் திருட்டு போகாமல் இருந்தது.இதையடுத்து கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்மநபர் ஒருவர் கடைக்குள் புகுந்து திருட முயற்சிப்பதும், ஆள் நடமாட்டம் இருந்ததால் திருடாமல் சென்றதும் தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.