புதுவையில் 8 மாணவர்களை ஏற்றி செல்ல அனுமதிக்க வேண்டும் - ஆட்டோ டிரைவர்கள்

புதுவையில் 8 மாணவர்களை ஏற்றி செல்ல அனுமதிக்க வேண்டும் என போக்குவரத்து ஆணையரிடம் ஆட்டோ டிரைவர்கள் மனு அளித்தனர்.

Update: 2023-06-28 16:33 GMT

புதுச்சேரி

புதுவை ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ சங்க மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் தலைமையில் தலைவர் சேகர், பொருளாளர் செந்தில்முருகன் மற்றும் நிர்வாகிகள் போக்குவரத்துத்துறை ஆணையர் சிவக்குமாரை சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

ஆட்டோக்களில் குறைந்த அளவிலான மாணவர்களை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதனால் மாணவர்களை ஏற்றி செல்லும் ஆட்டோக்களின் எண்ணிக்கை அதிகரித்து போக்குவரத்து பாதிக்கும்.

அதேபோல் பெற்றோர்களிடம் வசூலிக்கும் கட்டணமும் 2 மடங்கு உயரும். எனவே 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் 8 பேர், 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் 6 பேரை ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும்.

நகர பகுதியில் அரசு அனுமதிபெறாமல் 2 சக்கர வாகனங்கள் வாடகைக்கு விடப்படுகிறது. இதனை முறைப்படுத்த வேண்டும். காலை நேரங்களில் மாணவர்களை ஏற்றி செல்லும் ஆட்டோக்களை சோதனை செய்வதால் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியவில்லை. எனவே பள்ளி முடிந்து வரும் நேரத்தில் சோதனை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்