வேளாண் அதிகாரிகள் உண்ணாவிரதம்

துணை இயக்குனராக பதவி உயர்வு வழங்கக்கேட்டு வேளாண்துறை அதிகாரிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2023-09-11 22:34 IST

காரைக்கால்

துணை இயக்குனராக பதவி உயர்வு வழங்கக்கேட்டு வேளாண்துறை அதிகாரிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதம்

காரைக்கால் கூடுதல் வேளாண் துறையில் கடந்த பல ஆண்டுகளாக பணிபுரியும் அதிகாரிகளுக்கு துணை இயக்குனராக பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி புதுச்சேரி வேளாண் பட்டதாரி அலுவலர் நலசங்கம் சார்பில் வேளாண் துறை முன்பு அதிகாரிகள் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்துக்கு சங்க இணை செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் செந்தில் முன்னிலை வகித்தார்.

விவசாயிகள் ஆதரவு

அப்போது விவசாயத்துறை மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள், துறைகளின் கூடுதல் இயக்குனர்கள், இணை பணியிடங்களை நிரப்பவேண்டும். விவசாய அதிகாரி பதவிக்கு இன்றியமையாத தகுதியாக பி.எஸ்சி அக்ரி பட்டத்தை சேர்த்து ஆட்சேர்ப்பு விதிகளை திருத்தவேண்டும். இணை வேளாண் இயக்குனர், கூடுதல் வேளாண் இயக்குனர் மற்றும் வேளாண்துறை இயக்குனர்கள் ஆகியோரை புதுச்சேரி குடிமைப்பணியில் (பி.சி.எஸ்) இணைத்திடவேண்டும். காலி பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும் என்ற கோரிக்கை உண்ணாவிரதத்தில் வலியுறுத்தப்பட்டது. அதிகாரிகளுக்கு ஆதரவாக, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்