பாண்லேவில் முகவர்களாக வாய்ப்பு

புதுச்சேரி பாண்லேவில் முகவர்களாக வாய்ப்பு மேலாண் இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.;

Update:2023-09-17 23:51 IST

புதுச்சேரி

புதுச்சேரி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய மேலாண் இயக்குனர் ஜோதிராஜூ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமானது (பாண்லே) மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களான மோர், தயிர், நறுமன பால், பால்கோவா, பனீர், நெய், குல்பி, பாதாம் பவுடர் மற்றும் ஐஸ்கிரீம் வகைகள் தரமானதாகவும், மலிவாக விற்பனை செய்து வருகிறது. இதன் மூலம் புதுவையில் உள்ள மக்கள் மனதில் நன்மதிப்பை பாண்லே நிறுவனம் பெற்றுள்ளது. பாண்லே மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களில் விற்பனையை விரிவுப்படுத்த ஆர்வமுள்ள புதுச்சேரியின் நகர்வாழ் இளம் தொழில் முனைவோர், கடை உரிமையாளர்கள், சிறுவணிகம் மற்றும் மலிவு விலை கடை வைத்திருப்போர் பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ முகவர்களாக பால் பொருட்களை விற்பனை செய்யலாம். எனவே விருப்பமுள்ளவர்கள் மிஷன் வீதியில் உள்ள பாண்லேவின் விற்பனை அலுவலகத்தை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்